இளம் தலைமுறையினரின் வாழ்வியலைச் சொல்லும் ‘ரேவன்’!

‘டாடா’ இயக்குநரின் அடுத்த தயாரிப்பு

டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ரேவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக ரேவன் படம் உருவாகிறது.

டாடா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் K பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராகப் பணியாற்றிய கல்யாண் K ஜெகன் இயக்குநராக அறிமுமாகிறார்.

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் கே பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா. அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ரேவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

You might also like