இந்த நிலை மாறும்…!

– சார்லி சாப்ளின் மந்திரச் சொல்

1889-ம் ஆண்டு லண்டன் நகரில் சார்லி சாப்ளின் பிறந்த ஓரிரு வருடங்களிலேயே பெற்றோருக்குள் சண்டை வந்து விவாகரத்து ஆகிவிட்டது.

பேசத் தொடங்கும் முன்பே மேடையில் தாயுடன் சேர்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தம்.

5 வயது சிறுவனின் பாட்டுக்கு கிடைத்த அமோக வரவேற்பு 7 வயதிலேயே பறிபோனது. காரணம் அவனுடைய தாயின் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சலூன், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கெல்லாம் வேலை செய்தவர்.

சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். தந்தையும் திடீரென இறந்து விடவே மீண்டும் வாழ்க்கையில் தொய்வு.

1910-ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு அவருடைய கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும் நிஜ வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்தார்.

அந்தக் கால கட்டங்களில் அவரது குடும்ப வாழ்வு அவரை பாடாய்படுத்தியது.

நான்காவது திருமணத்தின் பின் தான் இந்த குடும்ப வாழ்வு தொல்லைகள் அவரைவிட்டு நின்றன.

1945-ம் ஆண்டு அமெரிக்க அரசு சார்லி சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என குற்றஞ்சாட்டியது.

அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்க மறுத்ததால் வேறுவழியின்றி கனத்த இதயத்துடன் 1952ஆம் ஆண்டு சுவிஸ்லாந்தில் அடைக்கலம் புகுந்தார்.

1972-ம் ஆண்டு காலச் சக்கரம் சுழன்று அதே சாப்ளினை சிறந்த நகைச்சுவை நடிகர் என அறிவித்து விருது வழங்க அமெரிக்க அரசு அழைத்தது. அளித்த பரிசினைப் பெற்றுக் கொண்டாலும் அங்கே தங்க மனமில்லாமல் சுவிஸ்லாந்து திரும்பிவிட்டார்.

விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு “இவ்வளவு போராட்டங்களை கடந்து எப்படி ஜெயித்தீர்கள்? என்ன ரகசியம்? எனக் கேட்டார்கள்

சாப்ளின் சிரித்தார்.

“எல்லோரையும் தான் சிரிக்க வைத்தாலும் இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை இன்பமாக இருந்தாலும் சரி துன்பமாக இருந்தாலும் சரி மாறிவிடும் இதோ இந்தக் கணத்திலும் கூட…”

வறுமையில் பிறந்து வாழ்வெல்லாம் போராடி உலகெங்கும் தன் பெயரை உச்சரிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞனின் “இந்த நிலை மாறிவிடும்” என்கின்ற மந்திரச்சொல் நம்முடைய வெற்றிகளுக்கும் நல்ல சாவி.

You might also like