ஹெலிகாப்டர் எவ்வளவு உயரம் பறக்கும்?

ஹெலிகாப்டரிலுள்ள ரோட்டார் எனும் சுழலியால், காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும் உயரமான பகுதிகளில் அதிக ஏற்றத்தை அளிக்க முடியாது. இதனால், உயரமான பகுதிகளில் ஹெலிகாப்டர் பறப்பது பிரச்சினைக்கு உரியதே.

இப்போதைய எஞ்சின்கள் கூட இதற்கு ஏற்றாற் போல இல்லாததால், கேஸ் டார்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக ஹெலிகாப்டர்கள் 5 ஆயிரம் மீட்டர் உயரம் வரை, எந்த வித பிரச்சினையும் இன்றி பயணிக்கும்.

ஆனால், 2005-ல், பிரெஞ்சு பைலட் டிடியர் டெல்சல்லி எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

அதன் உயரம் 8,850 மீட்டர் அன்றிலிருந்து நிறைய விமானிகள், 5 ஆயிரம் மீட்டர் உயரத்தை தாண்டியும், அதிக உயரம் பறக்க முயற்சிக்கிறார்கள்.

– நன்றி: தினந்தந்தி 

You might also like