தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார்!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தார்.

திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான் பட்டத்தை முடித்தார் ராசு. அத்துடன் சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டங்களை பெற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ஈரோட்டில் தமிழாசிரியர் பணியை தொடங்கி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.

பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு தொல்லியல் துறையில், துறை தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட ஆய்வு பணியை மேற்கொண்டார்.

கல்வெட்டறிஞர், பேரூராதீன புலவர், கல்வெட்டியல், கலைச்செம்மல், திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

You might also like