அருமை நிழல் :
1958ல் தமிழகம் வரவிருந்த அப்போதைய பாரத பிரதமர் நேருவிற்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க திமுக முனைந்தது. காரணம் பேட்டி ஒன்றில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை காங்கிரஸ் அரசு கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தது. அங்கு ஆறு நாட்கள் இருந்தார்.
எம்ஜிஆருக்கு முதல் வகுப்பு சிறையில் இடம் அளித்தது அரசு. ஆனால் எம்ஜிஆர் அதை மறுத்து தானும் மற்ற பிரமுகர்கள், தொண்டர்கள் இருக்கும் அறையிலேயே தங்கினார்.
விடுதலையான பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. எம்ஜிஆருடன் (இடமிருந்து வலமாக) வளையாபதி முத்துகிருஷ்ணன், எஸ்.எஸ். ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி உள்ளிட்டோர்.
- நன்றி : எம்ஜிஆர் உலகம் முகநூல் பதிவு