படித்ததில் ரசித்தது:
செக்கை இழுத்த பெருந் தமிழா – தில்லித்
தெருவில் உனக்குத் தலை குனிவா?
மக்கள் கவிச் சிங்கம் பாரதியே – உன்
மண்ணில் தமிழுக்குப் பேரிழிவா?
வீரத் தமிழச்சி நாச்சியாரே – வாள்
வீசிய மருது சோதரரே
ஆரமுதான சுதந்தரமும் – இன்று
ஆலகால நஞ்சாய் ஆனதுவோ?
– சிற்பி பாலசுப்பிரமணியம்