குழந்தைகளின் கணிதத் திறனை மேம்படுத்துகிறதா அபாகஸ்?

அபாகஸ் என்பது பழங்காலத்தில் இருந்தே இருக்கக் கூடிய ஒரு கணக்கீட்டுச் சாதனமாகும். இந்த முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் அதற் பற்றிய விழிப்புணர்வு, தெளிவோ நம்மிடம் இல்லாமல் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது அபாகஸ். அபாகஸ் பயிற்சியின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் இந்த பயிற்சியானது குழந்தைகளின் மூளை திறனை அதிகப்படுத்துவதாக முடிவுகள் கூறுகின்றன.

அபாகஸ் என்றால் என்ன? அது பற்றிய முழு தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஹாபி ஸ்கூல் நிறுவனரும் அபாகஸ் பயிற்சியாளருமான ஜெயஸ்ரீ நிதின்.

அபாகஸ் என்றால் என்ன?

மணிகளை வைத்து சொல்லி கொடுக்கும் ஒரு முறை தான் அபாகஸ். நாம் முன்னோர்கள் பல காலத்தில் இருந்தே பயன்படுத்திய கணக்கீட்டு முறை தான்.

நாம் விளையாடும் போது அந்த காலத்தில் விளையாட்டு பொருளாக மணிகள் கோர்த்த ஒரு சட்டம் இருக்கும்.

அதை வைத்து நமது பெற்றோர்கள் நமது விரல்களை பிடித்து மணிகளை நகர்த்தி எண்ணிக்கைகளை கற்றுக் கொடுப்பார்கள்.

அது அபாகஸ் முறை என்று தெரியாமல் கற்று கொண்டது தான்.

அதைத்தான் இப்போது இன்னும் கொஞ்சம் மெறுகேற்றி புது வடிவில் குழந்தைகளுக்கு புரியும் படி கற்றுக்கொடுக்கிறோம்.

குழந்தைகளிடம் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

அவர்களது மூளைத்திறனை அதிகப்படுத்தி சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உதவுகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்துதல், கற்றல் திறனை மேம்படுத்துதல் மற்றும் அறிவுத்திறன் கூர்மையாக்குகிறது.

இரண்டு கைகளையும் பயன்படுத்தி அபாகஸ் கற்றுக் கொள்ளும் போது மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.

மூளைக்கு அழுத்தம் இல்லாமல் இருக்கும் போது அவர்களது கற்பனை திறன் அதிகரிக்கிறது.

மேலும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அபாகஸ் குழந்தைகள் கணக்கீட்டு முறை மற்றும் பாடங்களை விரைவாக அவர்களால் முடிக்க முடியும். மேலும் கல்வி சுமையினால் ஏற்படும் அழுத்தம் குறைக்கப்படுகிறது.

பாடத்தில் இருக்கும் கணக்கீட்டு முறை அபாகஸ் இரண்டுக்குமான வேறுபாடு என்ன?

நமது விரல்கள் வைத்து எண்ணிக்கையை சொல்லி கொடுத்து அதன் வழியே பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் என்று கணக்கீடு பன்னுவது பள்ளியில் நடத்த கூடிய முறை.

இதனால் ஒன்பது வரை மட்டும் தான் கணக்கில் கொள்ள முடியும்.

ஆனால் அபாகஸ் முறையில் ஒரு வரிசையில் ஒன்பது மணிகள் இருக்கும். அதில் இருந்து தான் எண்ணிக்கை தொடங்கும்.

இந்த முறையில் பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று லட்சம் வரை நம்பர் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது ஒரு கணக்கை அவர்களால் வேகமாக போட்டு முடித்துவிட முடியும்.

குழந்தைகளுக்கு புரியும் படி [ரைம்ஸ்] பாடல் வழியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒரு சாதாரண குழந்தை ஒரு கணக்கை முடிக்க 2 நிமிடம் எடுத்துக் கொண்டால் அவர்களால் 30 நொடியில் தீர்வு சொல்லிவிட முடியும்.

அபாகஸ் எத்தனை லெவல் [நிலை] இருக்கிறது?

நான்கு வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஜூனியர் நிலை [லெவல் ] 4 இருக்கிறது. அதை முடித்து விட்டால் மீது எட்டு நிலையை தொடரலாம். அதுவே 7 வயது மாணவர்கள் என்றால் ஜூனியர் நிலை தேவையில்லை.

நேரடியாக அபாகஸ் வகுப்புக்கு போகலாம். மொத்தம் இதில் 10 நிலை இருக்கிறது.

அதில் ஒவ்வொன்றாக அவர்கள் முடித்துக் கொண்டு போக முடியும். வயது தான் இதில் முக்கியமான ஒன்று.

4 முதல் 6 வயது குழந்தைகளுக்கு கூட்டல், பெருக்கல், வகுத்தல் என்பது தெரியாமல் உள்ளே வருவதால் அவர்களுக்கு அடிப்படை கற்று கொடுத்த பிறகு அவர்கள் அடுத்த நிலைக்கு செல்கின்றனர்.

பொதுவாக இதில் ஒரு நிலை முடிந்ததும் தேர்வு நடத்தப்படும்.ஆண்டுக்கு ஒரு முறை தேசிய அளவில் மற்றும் சர்வதேச நிலையிலும் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அபாகஸ் கற்றுக் கொள்ள ஏற்ற வயது என்ன?

4 வயது முதல் 14 வயது வரை மட்டுமே அபாகஸ் கற்றுக் கொள்ள முடியும். அந்த வயது தான் அவர்களது மூளை ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மையில் இருப்பதால் கற்று கொடுப்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். கவனச் சிதறல் இல்லாமல் வேகமாக கற்றுக்கொள்ள இதுதான் சிறந்த வயது.

இந்த வேகம் மன அழுத்தத்தை கொடுக்குமா?

கண்டிப்பாக கொடுக்காது. அவர்களின் மூளை புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

மூளை சுறுசுறுப்பாகும், சோர்வடையாமல் அடுத்து என்ன என்று தான் அவர்கள் மூளை எதிர்பார்க்கும்.

இதனால் அவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் இருக்கின்றனர்.

ஒரு கணக்கு முடித்தால் தான் அடுத்த நிலைக்கு அவர்களால் செல்ல முடியும் என்பதால் மன உறுதியை மேம்படுத்தும்.

மூளையின் செயல் திறனை அதிகப்படுத்துமே தவிற சேர்வடையச் செய்யாது.

அபாகஸ் வருங்காலத்தில் அவர்களுக்கு எப்படி உதவுகிறது?

போட்டி தேர்வின் போது நம்பிக்கையை கொடுக்கிறது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதால்.

அவர்கள் கேள்விகளுக்கு எளிதாக விடை கூற முடியும்.

கணிதம் சம்பந்தமான தீர்வுகளை மூளையில் கணக்கீடு செய்து எருது விடும் ஆற்றலுடன் இவர்கள் இருப்பார்கள்.

பேப்பரில் எழுதி கணக்கீடு செய்யமால் நேரடியாக விடையை எழுதிவிட முடியும்.

அதனால் தேர்வு நேரம் வீணாகாமல் விரைவில் அவர்கள் முடிக்க முடியும்.

அபாகஸ் பயிற்சி பெற்ற குழந்தைகள் தங்களது மன கணிதத் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர் என்றார் பயிற்சியாளர் ஜெயஸ்ரீ நிதின்.

– யாழினி சோமு

You might also like