மனிதனின் கைரேகையை ஒத்திருக்கும் விலங்கு!

விலங்குகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது.

நத்தை மூன்று வருடங்கள் வரை தூங்குமாம்.

விலங்குகளில் யானைகளால் மட்டும் குதிக்க முடியாது.

மற்ற விலங்குகள் போல காண்டாமிருகத்தின் கொம்பு இல்லை. அவை முடியினால் ஆனது.

கோலா மற்றும் மனிதர்களின் கைரேகை ஒரே மாதிரியானவை.

அண்டார்டிக் பனிப்பாறைகளில் உள்ள பனியில் கிட்டத்தட்ட மூன்று சதவிகிதம் பென்குயின் சிறுநீர்.

தீக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.

மரங்களில் இருந்து தவறி விழுவதால் சுமார் 50 சதவீத ஓராங்குட்டான்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது.

You might also like