வெற்றுக் கோபத்தை விட்டொழி!

ஒருவருக்கு ஞானம் எந்த நேரத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமான கதை இது.

ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்த துறவி ஒருவருக்கு யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது.

அதன் ரகசியத்தை அறிந்து கொள்வதில் சிஷ்யர் ஒருவருக்கு மிகுந்த ஆர்வம்.
அதை அறிந்து கொள்ள அந்த சிஷ்யர் தன் குருவிடம் வினவினான்.

அதற்கு விளக்கமளித்த அந்தத் துறவி, “நான் ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வதை என் வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு.

இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்? என கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால் அது வெற்றுப்படகு!

அந்தப் படகு காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் அமர்ந்த படகின் மீது மோதியிருக்கிறது.

என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்? என்பதை அன்று உணர்ந்தேன்.

அன்றிலிருந்து யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்; இதுவும் வெற்றுப்படகுதான் என்று அமைதியாகி விடுவேன்!

ஞானம் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் வரலாம்” என விளக்கமளித்தார்!

நாமும் பலநேரம் இப்படித் தான் இருக்கிறோம். தேவையே இல்லாமல் மற்றவர்கள் மீது கோபப்பட்டு, நம்மையும் வருத்திக் கொண்டு, பிறரையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதை உணர்ந்தாலே நம்முடைய பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like