1968-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் முடிந்து தேர்தலுக்குக் கொடுத்த பணத்தைக் கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம்.
நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்னபோதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு.
நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல.
வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு, “கணக்கை ஒப்படைச்சிட்டேன்” என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது.
“யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா..” என சத்தம் போட்டாரு.
“அது தானே முறை” என்றார் கக்கன்.
“நீங்க யாருன்னு எனக்குத் தெரியும். அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்”ன்னாரு.
அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லவில்லை.
அது தான் கக்கன் அவர்களின் பெருந்தன்மை.
பெருந்தலைவர் காமராஜர் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்… அவர்களில் ஒருவர் கக்கன்…
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…
போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர்_நலம்
மற்றும்
மதுவிலக்கு…
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர்.
பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்துக் கொள்வார்.
எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க “குறை சொல்ல முடியாத மனிதர் கக்கன்தான்…” என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை…!
– நன்றி: முகநூல் பதிவு