1981 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்ட நாயகிகள் மார்க்கெட்டை இழந்ததாக வரலாறு கிடையாதே! கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது ரேவதியை.
அதன் பிறகு ரேவதிக்கு வந்த வாய்ப்பால் 80 மற்றும் 90 களில் தவிர்க்க முடியாத நாயகியாக அவதாரம் எடுத்தார்.
கண்களை உருட்டி உருட்டி ரேவதி பேசும் வசங்கள் இன்றைய கால இளைஞர்களையும் இன்ஸ்டாகிராமில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ரேவதியின் இயற்பெயர் ஆஷா.
நடிப்புக்கு மட்டுமல்ல, நடனத்துக்கும் புகழ்பெற்றவர் ரேவதி.
கிளாசிக்கல் டான்ஸில் கலக்கிக் கொண்டிருந்தவர், கடந்த பல ஆண்டுகளாக நடனமாடுவதைக் கைவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தன் டான்ஸ் குரு ரங்கநாயகி ஜெயராமன் சொன்னதற்காக 2019-ல் மீண்டும் நடனமாடத் தொடங்கினார்.
“அம்மாவுக்கும் மீறிய மரியாதையை டான்ஸ் குரு மேல வெச்சிருக்கேன்.
அவங்க இருக்கிற இடத்துல சேர்ல உட்கார மாட்டேன். தரையிலதான் உட்காருவேன்” என்று சொல்லியிருக்கிறார் ரேவதி. அந்தளவுக்கு குருபக்தி கொண்டவர் நடிகை ரேவதி.
நிகழ்ச்சி ஒன்றில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் நடன குரு ரங்கநாயகி ஜெயராமனுடன் ரேவதி.