பிரித்தானிய, இலங்கை, இந்தியா அரசுகளால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களின் வரலாற்று அநீதிக்கு நீதிகோரி பல போராட்டங்களில் விடிஎம்எஸ் (VTMS) மற்றும் தேயிலை ரப்பர் பெருந்தோட்ட சங்கங்கள் ஈடுபட்டு வருவது அறிந்ததே.
இதன் எதிர்காலச் செயல்பாடுகள் தொடர்பான கூட்டம் கடந்த ஒன்றாம் தேதி திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு விடிஎம்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.எஸ்.செல்வராஜ் தலைமை ஏற்க, வழக்கறிஞர் திரு. தமிழழகன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பினராக இலங்கையின் முன்னால் அமைச்சரும் தற்போதைய கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவர் திரு.மனோ கணேசன் சிறப்புரை வழங்கினார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் மாநிலத் தலைவர் K.A. சுப்பிரமணியம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர், வழக்கறிஞர் திரு. ஈசன் முருகேசன்,
கேரளா விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் P.T. ஜோன், காவேரி குண்டாறு ஒருங்கிணைப்பு தலைவர் மிசா. மாரிமுத்து, டேன்டீ மக்கள் வாழ்வாதார முன்னணி தலைவர்கள் மற்றும் அனைத்து ஊடகத்தினர் கலந்துகொண்டனர்.
இதில் இந்தியா அரசும், தமிழ்நாட்டு அரசும் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதோடு, மலையகத் தமிழர்களின் எதிர்கால செயல்பாடுகளுக்காக ‘இலங்கை – தமிழ்நாடு மலையக தமிழர் தோழமை இயக்கம்’ தொடங்கப்பட்டது.
இதற்கு எம்.எஸ்.செல்வராஜ் தலைவராகவும், வழக்கறிஞர் திரு.தமிழகன் செயலராகவும், இலங்கை எம்.பி.மனோ கணேசன் கெளரவ தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த முக்கிய கலந்துரையாடலில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பல கலந்துகொண்டனர். இதன் முக்கியஸ்தர்கள் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.
– எம்.எஸ்.செல்வராஜ்.