பாக்ஸ் ஆபீசில் மாபெரும் சாதனை படைத்த ‘அஸ்வின்ஸ்’!

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.

மாடர்ன் டே ஹாரர் திரில்லர் படமான ‘அஸ்வின்ஸ்’ வெளியான முதல் நாளிலிருந்தே பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒரே மாதிரியான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

கதைக்களம், உயர்தர தொழில்நுட்பம், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகியவற்றுடன் ‘அஸ்வின்ஸ்’ சிறந்த ஒரு சினிமா அனுபவத்தையும் வழங்குகிறது.

‘அஸ்வின்ஸ்’ வெகுஜனங்களின் மறுக்க முடியாத விருப்பமாக உயர்ந்து நிற்கிறது!

அதன் வசீகரிக்கும் கதைக்களம் மற்றும் திறமையான நடிப்பு, படம் பற்றிய பாராட்டுதலுக்குரிய பேச்சு போன்றவை ஆர்வமுள்ள பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வர வைத்துள்ளது.

இந்த கிரிப்பிங் திரில்லர் படத்திற்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பு திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் கிடைத்த அமோக வெற்றியால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் கொண்டு வந்து, திரில்லரில் ஒரு புதிய பரிமாணத்தை வழங்குகிறது.

You might also like