பூஜ்ஜியத்தை முட்டையோடு ஒப்பிடுவதை நிறுத்துவோம்!

கோழி முட்டையின் பயன் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் தவறு. கோழி முட்டை எப்படியெல்லாம் சாதனைகளுக்காகப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இனியாவது பூஜ்ஜியத்தை கோழி முட்டை என்று கிண்டலடிக்காமல் இருப்போம்.

*எமரிடன் என்ற அமெரிக்கர் பாலைவனப் பகுதியில் கோழி முட்டையை ஒரு ஸ்பூனில் வைத்துக்கொண்டு 48 கி.மீ தூரத்தை 253 நிமிடங்களில் ஓடிக் கடந்தார். 23.4.1990-ல் நிகழ்த்தப்பட்ட சாதனை இது.

*1976-ம் ஆண்டு டோக்கியோ நகரிலுள்ள கோல்ப் திடலில், டேவிட் எஸ்டோனோல்யூ என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து கோழி முட்டைகளை லாவகமாக தரையில் போட்டார்.

இவற்றில் பல உடையவே இல்லையாம்.

*பின்லாந்தில் நடந்த முட்டை எறியும் போட்டியில், ஒருவர் வீசிய முட்டை 44.5 மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தது. ஆனாலும் உடையவே இல்லை.

*இங்கிலாந்தில் சமையலறை உதவியாளர்கள் இரண்டு பேர், 23.4.1971 அன்று 12,600 முட்டைகளை ஏழரை மணி நேரத்தில் ஓடு நீக்கி சாதனை புரிந்துள்ளனர். இருவரும் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*உலக அளவில் கோழி முட்டை உற்பத்தியில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருவது அமெரிக்கா. இந்தியாவிற்கு நான்காவது  இடம்.

  • நன்றி: தினந்தந்தி
You might also like