உங்களுடைய மிகச் சிறந்த சொத்து எது?

நம்பிக்கை மொழிகள் : பிரையன் டிரேசி

உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர், வாழ்க்கை முன்னேற்றப் பயிற்சியாளர், பிரபல அமெரிக்க எழுத்தாளர் பிரையன் டிரேசி, விற்பனையில் சாதனை படைத்த எழுபது நூல்களின் ஆசிரியர்.

’ஏர்ன் வாட் யூ ஆர் ரியலி வொர்த்’, ’ஈட் தட் ப்ராஹ்’, ’த சைக்காலஜி அச்சீவ்மெண்ட்’ ஆகியவை மனித மனங்களில் அதிக மாற்றம் விதைத்த இவரது புகழ்பெற்ற நூல்கள். அவரது சில நம்பிக்கை மொழிகள் ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக…
#
“நீங்கள் எதை உண்மையாக நினைக்கிறீர்களோ அது நனவாகிவிடும்.
பயம் அல்லது தீராத விருப்பத்தால்தான் எதையும் செய்வதற்கு நீங்கள் தூண்டப்படுவீர்கள்.

எதுவும் நனவாகத் தேவையில்லை என்றும் எப்போதும் உங்களைப் பற்றிச் சொல்லாதீர்கள்.

அன்பு பகிர்வதால்தான் வளர்கிறது. எனவே மற்றவர்களுக்கு அதிகமாக அளிப்பதன் மூலமே நீங்கள் நிறைய பெறமுடியும்.

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

வெற்றிக்கான திறவுகோல் என்பது நாம் விரும்பும் விஷயங்கள் பற்றிய உணர்வு ரீதியான கூர்ந்த கவனம். பயப்படுவதல்ல.

வெற்றிகரமான மனிதர்கள் அனைவரும் பெருங்கனவு உள்ளவர்கள்.
ஒவ்வொரு விஷயத்திலும் தனித்துவம், தொலைதூரத்தில் இருக்கும் இலக்கை நோக்கி தினமும் உழைப்பது, குறிக்கோள் மற்றும் நோக்கம் என அவர்கள் தங்கள் எதிர்காலத்தை கற்பனை செய்கிறார்கள்.

நீங்கள் தகுதியுள்ள ஒரு பெரும் காரியத்தை சாதிக்கும்வரை, எண்ணற்ற சிறுசிறு முயற்சிகளை செய்தாலும் யாரும் பார்க்கவும் மாட்டார்கள் அல்லது அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

எப்போதும் வெற்றிகரமான மனிதர்கள் மற்றவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். வெற்றிபெறாத மனிதர்கள் அதில் எனக்கு என்ன இருக்கிறது என்று எப்போதும் கேட்பார்கள்.

உங்கள் குழந்தைகள் முடிவுசெய்த இலக்கு மற்றும் வேலைகளில் பெற்றோராக நீங்கள் உதவுங்கள். உங்களுடைய மிகச்சிறந்த பிரார்த்தனைகளை அவர்களுக்கு வழங்குங்கள்.

வெற்றிகரமான மனிதர்கள் எல்லோரும் வெற்றிகரமான பழக்கங்கள் உடையவர்கள்.

எல்லையற்று கற்பனை செய்யுங்கள். எது சாத்தியம் என்று சிந்திப்பதற்கு முன் எது உங்களுக்கு விருப்பமானது மற்றும் சரியானது என்பதை தீர்மானியுங்கள்.
டீம் வொர்க் மிகவும் முக்கியமானது. அப்போதுதான் உங்களுடைய திறமையின் உயரத்தை நீங்கள் அடையமுடியும்.

நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் பரிசுகளிலேயே உயர்வானது நிபந்தனையற்ற அன்பும், அங்கீகாரமும்தான்.

அதிர்ஷ்டம் என்பது கணிக்க முடியாதது. உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவையென்றால், நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இன்னும் அதிக ஊக்கத்துடன் செயல்படுங்கள்.

உங்களுடைய மிகச்சிறந்த சொத்து சம்பாதிக்கும் திறன். உங்களது மிகச்சிறந்த வளம் என்பது உங்களுடைய நேரம்.

உங்களுடைய பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் புதிய விஷயங்களை முயற்சி செய்யும்போது வசதியின்மை உணர்வீர்கள். ஆனால் அப்போதுதான் உங்களால் முன்னேற முடியும்.

எல்லா மனிதர்களிடமும் எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவற்றையே பாருங்கள்.
கம்யூனிகேஷன் என்பது ஒரு திறன், அதனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வேலை செய்யத் தொடங்கினால், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியின் தரத்தையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நேர்மறையான எதிர்பார்ப்புகள் நிறைந்த அணுகுமுறை, மிகச்சிறந்த ஆளுமையின் ஒரு அடையாளம்.

நன்றியுடன் வாழ்வதை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நிகழும் எல்லாவற்றுக்கும் நன்றி கூறுங்கள். அப்போது தான் நீங்கள் இப்போது இருக்கும் நிலையைவிட பலமடங்கு முன்னேறிச் செல்வதை உணர்வீர்கள்.

உங்கள் வருமானத்தில் மூன்று சதவீதத்தை உங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்கு செலவழியுங்கள். அதன்பொருட்டு உங்கள் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறீர்கள்.”

  • தான்யா
You might also like