திரைப்படங்களில் சாதிப் பெயர்களைத் தவிருங்கள்!

– குரல் கொடுக்கும் இயக்குநர் சீனு ராமசாமி

சாதிப்பெயர்களை வைத்து பல படங்கள் முன்பு வெளிவந்திருக்கின்றன. சாதிய உணர்வை மையமாக வைத்தும் சில படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அரசியல் வசனங்களுக்குக் கடுமை காட்டும் தணிக்கைக் குழுவினரின் கண்ணில் இம்மாதிரியான படங்கள் எல்லாம் படவில்லை.

மாறி மாறி சில குறிப்பிட்ட சாதியினரைத் தூக்கிப் பிடித்தோ, மற்றவர்களை மட்டம் தட்டியோ, பழம் பெருமை பேசக்கூடிய திரைப்படங்கள் வெளிவந்து அவை சர்ச்சைக்குள்ளான நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குநரான சீனு ராமசாமி குரல் கொடுத்திருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.

“தமிழ்நாட்டில் சாதிப்பெயர் கொண்ட பாடல்கள் சினிமா, தனியிசைப் பாடல்கள் எதுவாயினும் அவற்றைப் பொதுவிடங்களில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் எனப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதியத் துவேசம் மறைமுகமாக இருந்தாலும் கூட, தணிக்கை, தடை விதித்தல் செய்திட வேண்டுகிறேன்’’ என்று பதவிட்டிருக்கிறார் சீனு ராமசாமி.

இவருடைய இந்தக் கருத்து சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சாதிய உணர்வைத் தூண்டி விடுவதற்கு எதிரான குரல் தமிழ்த் திரையுலகில் இருந்தே கிளம்பியிருப்பது பாராட்டத்தக்க ஒன்றுதான்.

You might also like