பாடலை மாற்றாமல் படத்தை மாற்றிய வாலி!

எம்ஜிஆரின் பெரும்பாலான பாடல்களில் அவருடைய அரசியல் பிரவேசத்தை தன் பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் கவிஞர் வாலி.

அப்படி எம்ஜிஆரின் ஒரு பாடலுக்கு அவர் பல்லவி போட அதை எம்.எஸ்.வி மறுத்துள்ளார்.

அதாவது “புத்தம் புதிய புத்தகமே, உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற அந்த பல்லவியை எம்.எஸ்.வியிடம் படித்துக் காட்டி இருக்கிறார் வாலி.

ஆனால் எம்.எஸ்.வி அதைக் கேட்டுவிட்டு இந்த பல்லவி மிகவும் பெரிதாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் சிறிதாக மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம்.

ஆனால் வாலிக்கோ இந்த பல்லவியை மாற்ற எண்ணம் இல்லையாம். உடனே எம்ஜிஆரின் இன்னொரு படமான ‘அரச கட்டளை’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைத்துக் கொண்டு இருந்தாராம்.

அவரிடம் இந்த பல்லவியை போட்டுக்காட்டி இருக்கிறார் வாலி.

அதோடு, இந்த பல்லவிக்கு ஏற்றபடி ஒரு டியூன் போட்டு காட்டுங்கள் என சொல்லி இருக்கிறார்.

அதே போல் கே.வி.மகாதேவனும் போட்டுக்காட்ட இதை அந்த படத்தில் இணைத்துக் கொண்டாராம் வாலி.

அந்தப் பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆனது!

You might also like