1. டால்பின்கள் மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.
2. விலங்குகளுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடியவை இவை.
3. உலகின் இரண்டாவது புத்திசாலி விலங்கு டால்பின்.
4. டால்பின்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
5. கடலில் வாழும் டால்பின்களில் 32 வகைகளும் ஆறுகளில் வாழும் டால்பின்களில் 4 வகைகளும் உள்ளன.
6. டால்பின்கள் நீருக்கடியில் 15-30 நிமிடங்களே தம் பிடிக்க முடியும். காரணம் நீருக்கடியில் அவை சுவாசிக்க முடியாது.
7. ஒவ்வொரு டால்பின் ஒலியும் தனித்தன்மை வாய்ந்தவை. வேட்டைக்கு செல்லவும் மற்றும் பிற டால்பின்களை தொடர்பு கொள்ளவும் டால்பின்கள் ஒலி எழுப்புகிறது.
8. கடல் மட்டத்தைத் தாண்டி சுமார் 20 அடி உயரம் வரை கூட எம்பிக் குதித்து விளையாடும் சுறுசுறு குறும்புத்தனம் கொண்டவை டால்பின்கள்.
– நன்றி அறிவை வளர்ப்போம் இணைய வழி பதிவு.