நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நினைவில் நிற்கும் வரிகள் :

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே

(நல்ல பேரை)

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

(நல்ல பேரை)

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்

(நல்ல பேரை)

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

(நல்ல பேரை)

– 1969-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நம் நாடு திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி. இசை கே.வி.மகாதேவன், பாடியவர் டி.எம்.சௌந்தராஜன்.

You might also like