தில்லானா தந்த ஜாம்பவான்கள்!

அருமை நிழல் :

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ தவறாமல் இடம்பெறும். வசூல்ரீதியிலும் பட்டையை கிளப்பிய படம். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் மிக முக்கியமானது.

1968, ஜூலை 27 ஆம் தேதி வெளியான இந்தப் படம் தமிழ்த் திரை உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது எனலாம். தில்லானா மோகனாம்பாள் படத்தை நமக்கு வழங்கிய ஜாம்பவான்கள்.

நாட்டியப் பேரொளி பத்மினி, இயக்குநர் ஏ. பி. நாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாதஸ்வர மேதைகள் எம்.பி.என் சேதுராமன் – பொன்னுசாமி சகோதரர்கள்.

You might also like