– அழைப்பு விடுக்கும் மத்திய அரசு
பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 28-ம் தேதி புதிய பாராளுமன்றம் நோக்கி பேணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். இதனால் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அறிவித்தனர்.
விவசாயிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். பல்வேறு தரப்பில் இருந்து மல்யுத்த நட்சத்திரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.