புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவையொட்டி 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதை நினைவுகூறும் விதமாக 75 ரூபாய் நாணயம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமர் மோடி நாணயத்தை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சிறப்பு நாணயம் வட்ட வடிவில், 50 சதவீத வெள்ளி, 40 சதவீத செம்பு, 5 சதவீத நிக்கல், 5 சதவீத துத்தநாகம் ஆகிய 4 உலோக கலவையில், 35 கிராம் எடையில் இருக்கும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.
நாணயத்தின் ஒரு பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தோற்றமும், மறுபுறம் அசோகச் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும் என நிதியமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.