பிரதமர் மோடி பேச்சு
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்றுள்ளார். ஜி7 மாநாட்டின் இறுதி நாளான பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, இன்று மோதல்களை தடுப்பதில் வெற்றி பெறாதது ஏன்? என்றும் தீவிரவாதத்தின் வரையறை கூட ஐநாவில் ஏன் ஏற்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு, 21-ம் நூற்றாண்டுக்கு ஒத்துப்போகும் வகையில் இல்லை.
இன்றைய உலகின் உண்மையை ஐக்கிய நாடுகள் பிரதிபலிக்கவில்லை. தற்போதைய யதார்த்தத்தை அது பிரதிபலிக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் போன்ற பெரிய அமைப்புகளில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது” என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து 3 நாடுகள் பயணத்தின் முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.