சினிமாவில், கதைக்கு தகுந்த மாதிரி பாடல்கள் போடுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பாடல்களுக்காகவே ஒரு கதையை உருவாக்கி அதை மெகா ஹிட் ஆக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன்.
80 களில், இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம். பிரபலமான பெரும்பாலான இயக்குனர்கள் அவரின் இசைக்காக காத்திருந்த நாட்களில், அவராகவே ட்யூன்களை போட்டு, அட்டகாசமான 7 பாடல்களை கம்போஸ் செய்து, வரும் இயக்குனர்களிடம் போட்டு காண்பித்து, “7 பாடல்களையும் ஓரே படத்துக்கு மட்டுமே தரமுடியும். தனித்தனியாக கிடையாது” என ஸ்ட்ரிட்டாக சொல்ல, கடுப்பான பிரபலங்கள், 7-ம் வாங்கி ஒரே படத்துக்கு போடமுடியாது என்பதால் வாங்க மறுத்து விட்டனர்.
கதையை கேட்டு போட்டிருந்தால் சரி, இல்ல எதாவது கதை இருந்தாலும் சரி,
2 மே இல்லாமல் வெறும் பாடல்களை மட்டும் போட்டு வைத்து, ஏற்கனவே கதை ரெடி செய்து வரும் இயக்குனர்களுக்கு இந்த 7 பாடல்களும் எப்படி பொருந்தும்?. தனியாக ஒரு ட்யூன் மட்டும் வேணும்னாலும் இல்லை.
இந்த பாடல்களை தனியாக கேட்ட இயக்குனர்களில் பாலுமகேந்திரா, ராஜசேகர், மகேந்திரன் போன்ற பிரபல இயக்குனர்களும் அடக்கம்.
இந்த நேரத்தில், பயணங்கள் முடிவதில்லை, சரணாலயம், நான் பாடும் பாடல் போன்ற வெற்றிப் படங்களுக்கு பின், அடுத்த படத்துக்கான
வேலைகளை ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.
பஞ்சு அருணாசலம் பேனர்.
அவரிடம் கதையின் ஒன் லைன் சொல்லியாகி விட்டது.
சரி பாடல்களுக்கு?.
“இளையராஜா 7 ட்யூன் போட்டு வெச்சிருக்காருப்பா, ஆனா அந்த 7-ம் ஒரே படத்துல வைக்கிறமாரீ இருந்தாதான் தருவராம். 2, 3 ட்யூன்லாம் கெடையாதாம்.
நீ கேட்டு பாக்கறியா?”
“இதென்ன புது ரூல்ஸ். எல்லாரும் இவர் இசைக்கு காத்திருக்காங்கற கர்வமா?,
சரி வாங்க போய் பாக்கலாம்”.
7 ம் அபாரமான ட்யூன்ஸ்.
“ஒருத்தர் பாட்டுகளை போட்டு, “இந்த பாட்டுக்களுக்கு தகுந்த கத ரெடி பண்ணிக்கறவங்க வாங்குங்க” என சொல்றப்ப, ஏன்? அந்த பாட்டுகளுக்கு தகுந்த கதை ரெடி பண்ணி, அதை சக்சஸ் செய்ய முடியாது?.” என நினைத்து, அந்த இடத்திலேயே உருவான முழுகதை தான் “வைதேகி காத்திருந்தாள்”.
பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு பின், சுந்தர்ராஜனுக்கு ஹாட்ரிக் வெற்றிபடம். போலீஸ் இன்ஸ்பெக்டர், பழிவாங்குவது என்பது போன்ற கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்துவந்த விஜயகாந்தை நடிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படம்.
இதற்கு பின் வந்த சில படங்களை தவிர, பெரும்பாலான படங்களில் விஜயகாந்தின் நடிப்பு மிக தூக்கலாக இருக்கும்.
இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து வந்த அம்மன் கோயில் கிழக்காலே,
தழுவாத கைகள், காலையும் நீயே மாலையும் நீயே போன்ற படங்கள், விஜயகாந்த்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மண்வாசனை, புதுமைப்பெண் என 2 படங்களே நடித்திருந்த ரேவதிக்கு, நடிப்பு திறமை உள்ளது என திரையுலகில் நிலை நிறுத்திய படம்.
இந்த படத்தில் நடித்த நடிப்பு திறமையே,
இதற்கு பின் வந்த,
குங்கும சிமிழ்,
ஆகாயத் தாமரைகள்,
ஆண் பாவம்,
ஒரு கைதியின் டைரி,
பிரேம பாசம்,
உதய கீதம்,
கன்னி ராசி,
பகல் நிலவு,
மெளன ராகம், போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது
“வைதேகி காத்திருந்தாள்” படம்.
பாடல்களுக்காகவே கதையை உருவாக்கி, அதில் மாஸான வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்.
இந்த படத்தின் அனைத்து பாடல்களை இன்று கேட்டாலும் மிக அருமையாக இருக்கும்.
மனுசன் என்ன நினைத்து ட்யூன் போட்டாரோ….
1) இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.
2)ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு(பெண்).
3)ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு (ஆண்).
4) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.
5)அழகு மலராட அபிநயங்கள் கூட.
6)மேகங் கருக்கையிலே.
மீதி ஒரு பாடல் மிஸ்ஸிங்.
கோவை வெள்ளியங்கிரி பகுதியில் உள்ள அருவியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்ததால், அந்த அருவியை “வைதேகி”அருவி என்றே இன்றும் செல்லமாக அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.