தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!

– பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்

“என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன். அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது.

நான் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததும் அவருக்கே ஒன்றும் புரியவில்லை. தனிப்பட்ட விரோதங்களை நான் என்றுமே பார்ப்பதில்லை.

திறமையையே பார்ப்பேன். திறமை உள்ளவர்கள் எனக்குத் தீங்கு செய்தாலும், நான் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மை செய்திருக்கிறேன்”

– பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.

You might also like