சென்னையில் களைகட்டிய தலித் கலை விழா!

“வானம்” தலித் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பம், புகைப்பட, கண்காட்சி சென்னை பிராட்வே அருகே உள்ள மெமோரியல் ஹாலில் நடைபெற்றது.

சர்வதேச புகைப்படக் கலைஞர்களின் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மலைக்க வைக்கிறது என்று பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் கலை விமர்சகர் இந்திரன்.

“ஓவியங்களும் சிற்பங்களும் புதிய சக்திகளுக்கு இடம் கொடுத்து அதிநவீன படைப்புகளாக மிளிர்கின்றன.

இக்கண்காட்சியிலேயே 18 வயது புகைப்படக் கலைஞர் விளிம்பு நிலை மக்களின் வீட்டுச் சுவர்களில் ஏழைக் குழந்தைகள் வரைந்த சித்திரங்களை புகைப்படம் ஆக்கி இருக்கிறார்

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர், பணக்கார வீட்டு சோபாவில் எஜமானி அம்மாவின் பக்கத்தில் வேலைக்கார பெண்மணியை அமரச் செய்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

புகைப்படங்களில் அவர்கள் இருவரின் சங்கடமான உடல் மொழிகளின் மூலமாக உளவியல் ரீதியான பாடங்களை நாம் படிக்க முடிகிறது.

போதாக்குறைக்கு கண்காட்சியின் வாசலில்ஊர் கூடி சமைக்கலாம் என்ற பெயரில் கண்காட்சிக்கு வந்து இருப்பவர்களே முன்வந்து சமைத்துக்கொடுக்கலாம் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்” என்று நெகிழ்ந்து எழுதியுள்ளார் இந்திரன்.

You might also like