அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் காவியமாக கருதப்படும் ராமாயணத்தை தழுவி உருவாகியுள்ளது.
பூஷன் குமார் தயாரித்திருக்கும் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மகத்துவத்தைக் கொண்ட ‘ஆதி புருஷ்’ படத்தை, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகமே காணவிருக்கிறது என டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா குழு அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள நியுயார்க் எனும் நகரில் ஜூன் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் 22 ஆவது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய பிரத்தியேக காட்சி திரையிடப்படுகிறது.
‘ஆதி புருஷ்’ திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகளவிலும் வெளியாகிறது.
2001 ஆம் ஆண்டில் ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகர்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேக் ஹாட்காஃப் ஆகியோரால் OKX நிறுவப்பட்டது.
இதன் சார்பாக நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட பார்வையாளர்களை ஒன்றிணைத்து, கதை சொல்லல் மற்றும் திரைப்படத்தின் அனைத்து வடிவங்களையும் கொண்டாடுகிறது.
இந்த அற்புதமான சாதனை குறித்து இயக்குநர் ஓம் ராவத், ” ஆதி புருஷ் ஒரு படம் அல்ல. இது ஒரு உணர்ச்சி. ஒரு உணர்வு!
இந்தியாவின் உணர்வை எதிரொலிக்கும் கதையைப் பற்றிய எங்களது பார்வை. உலகின் மதிப்பு மிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான டிரிபெகா நடுவர் குழுவால் ‘ஆதி புருஷ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது ஒரு மாணவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன்” என்றார்.
நடிகர் பிரபாஸ் பேசும்போது, ”ஆதி புருஷின் உலகளாவிய பிரத்யேக காட்சியை காண்பதில் பெருமிதம் அடைகிறேன். நமது தேசத்தின் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்றார்.