அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர்.
1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை விருந்து. தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு மக்கள் திலகம் அந்தக் கச்சேரிக்கு திடீரென சென்று ரசித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமை தாங்க அழைத்தபோது, பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அவர்கள்தான் அதற்கு தகுதியானவர் என்று அவரை தலைமை ஏற்கக் கூறி அடக்கத்தோடு மறுத்துவிட்டார்.
‘கலைஞர்களை பாராட்டியாவது பேசுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அந்த இசை மேதைகளை புகழ்ந்துவிட்டு ரசிகராகவே மேடையிலிருந்து இறங்கினார். ஒரு நல்ல ரசிகர்தான் ஒரு நல்ல கலைஞராக இருக்க முடியும்.
இங்கு பதிவிட்டுள்ள படம் மக்கள் திலகம் முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் வயலின் மேஸ்ட்ரோ லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் காட்சி.
நன்றி: முகநூல் பதிவு