‘தியாக பூமி’ திரையிட்டபோது நடந்த விசித்திரம்!

அருமை நிழல் :

இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம் 1939 ல் இயக்கிய படம் ‘தியாக பூமி’. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி.

காங்கிரசை இந்தப் படம் ஆதரிக்கிறது என்று புகார்கள் கிளம்பிப் படத்திற்குத் தடை விதிக்கப் போவதாக ஒரே பரபரப்பு.

உடனே ஒரு ஏற்பாட்டைச் செய்தார். தடை வருவதற்கு முன்பு ‘தியாக பூமி’ படத்தைத் தொடர்ந்து திரையிடச் செய்தபோது, ஒரே கூட்டம்.

கூட்ட நெரிசலால் திரையங்க காம்பௌண்டு சுவரே இடிந்து போய்விட்டது. அந்த அளவுக்குக்கூட்டம்.

தியாகபூமி – கதையை அற்புதமாகச் செதுக்கியவர் கல்கி.

பல திரைப்படப் பாடல்களை எழுதிய ‘பாபநாசம் சிவன்’ இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். உடன் நடித்தவர் இயக்குநர் கே.சுப்பிரபணியத்தின் மற்றொரு மனைவியான எஸ்.டி.சுப்புலெட்சுமி.

அப்போது குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த பேபி சரோஜா இந்தப் படத்திலும் நடித்திருந்தார்.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தமிழ்த்திரையின் துணிச்சலான முயற்சிக்கு ஓர் அடையாளம் ‘தியாக பூமி’.

You might also like