புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!

– சாகித்திய அகாதெமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 

  • ஒருவரை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பணம் தருவது, உணவு தருவது, உடை தருவது, பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது இவைதான் சந்தோஷத்தின் அடையாளமாக உள்ளன. ஆனால், இவற்றை விடவும் மேலான சந்தோஷங்கள் உலகில் நிறையவே இருக்கின்றன. அந்த சந்தோஷங்களை உருவாக்கிக்கொள்ள பணமோ, பரிசோ தேவையில்லை.
    சொற்களே போதுமானது.
  • வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது. குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்தப் புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய்? எனச் சண்டையிடாத குடும்பமே இல்லை. உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே.
  • வாழ்க்கை
    பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது;
    எந்த ஏணி ஏற்றிவிடும்
    எந்தப்பாம்பு
    இறக்கிவிடும்
    எனத் தெரியாது;
    அதைவிடவும்
    எது பாம்பு எது ஏணி எனக்
    கண்டுகொள்வதும் எளிதல்ல;
    ஆனாலும் விளையாடிக் கொண்டே
    இருக்க வேண்டும்!
You might also like