வெற்றிவிழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள்!

அருமை நிழல்:

கும்பகோணத்தில் உள்ள கற்பகம் திரையரங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’தங்கப் பதக்கம்’ நூறு நாட்கள் ஓடியபோது அதற்கான விழா அதே திரையரங்கில் நடந்தது.

பி.மாதவன் இயக்கத்தில் 1974, ஜூன் ஒன்றாம் தேதி வெளியான இந்தப் படத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, பிரமிளா உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியவர் அன்றைய காங்கிரஸ் தலைவரான ஜி.கே.மூப்பனார்.

You might also like