அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
அதற்கு, உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார் என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனாலும் போட்டோகிராபர் சொன்னபடி ஒரு விரலைக் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பிறகு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தபோது ஏன் ஒரு விரலை காண்பித்தபடி புகைப்படம் எடுக்கச் சொன்னாய் என்று கேட்டார் அண்ணா.
அதற்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறார் அண்ணா.