இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’!

இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் ‘சஷ்டிபூர்த்தி’ என்று பெயரிடப்பட்ட புதுப் படத்தின் பூஜை நடைபெற்றது. விழாவிற்கு படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள்.

இசைஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி கிளாப் போர்ட் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் பவன் பிரபா. இப்படத்தை ரூபேஷ் குமார் சௌத்ரி தயாரித்து நடித்திருக்கிறார். ஆதியின் ‘கிளாப்’ படத்தில் அழகாக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்த அக்கன்ஷா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காந்தாராவில் நடித்த அக்ஷயுத் குமார், Y.விஜயா, சுபலேகா சுதாகர் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

சஷ்டி பூர்த்தி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கான திரைப்படமாக இருக்கும். நாயகனும், நாயகியும் நாயகனுடைய பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த எண்ணுகிறார்கள். அவர்களை சுற்றி நடக்கும் சுவாரசியமான கதை தான் சஷ்டிபூர்த்தி.

You might also like