ஆதிபுருஷ் படக்குழு வெளியிட்ட பிரத்யேக போஸ்டர்!

அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ‘ஆதி புருஷ்’ படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

வலிமை, விடாமுயற்சி, விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் தயாரிப்பாளர்கள், இந்த திரைப்படத்தில் அனுமனாக நடித்திருக்கும் தேவதத்தா நாகே இடம்பெறும் போஸ்டரை வெளியிட்டனர்.

அனுமனின் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் வகையிலும் அனுமன் ஜெயந்தியின் நன்னாளில் அவர்களது பக்தர்களுக்காக படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ‘அனுமன் சாலிசா’ எனும் பக்தி பாடலில் இடம்பெற்றிருக்கும் “வித்யாவான் குனி – மிகவும் புத்திசாலி. ராமபிரானுடன் நெருங்கிப் பழக ஆவலுடன் இருக்கிறான்” என்ற வரிகளை இந்த தெய்வீகம் ததும்பும் போஸ்டர் நினைவூட்டுகிறது.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜூன் 16 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

You might also like