‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு.
பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீடு ‘சோ’வுக்குப் பரிச்சயமானது.
ஒருதடவை நாடகத்தில் மேக்கப் போட்ட முன் அனுபவத்தால் , நளினமான பெண் வேஷத்தில் கனமான ‘மேக்கப்’புடன் அவர்களுடைய வீட்டிற்குப் போயிருக்கிறார் சோ.
பலரும் உற்றுப் பார்த்து ஒரேயடியாக குழம்பிப் போயிருக்கிறார்கள்.
தாமதமாகத் தான் ‘சோ’ அந்த வேடத்தில் வந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தை ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் சொன்னவர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்.