படித்ததில் ரசித்தது:
அசைந்து கெட்டது மனம்;
அசையாமல் கெட்டது உடல்;
எது அசைய வேண்டுமோ
நாம் அதைச் செய்யாமல்
உடலை வளைக்காமல்
நோயைக் கொண்டு வருகிறோம்;
அசையாமல் வைக்க வேண்டிய மனதை
யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து
முக்கியமான சமயங்களில்
சிந்திக்க முடியாமல் போகும்
மனமாக பயன்படுத்துகிறோம்;
கவலையை உருவாக்குகிறோம்!
– வேதாத்திரி மகரிஷி