பள்ளிக் குழந்தைகளின் வாழ்வைச் சொல்லும் படம்!

யூ டியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் பாபா பிளாக்‌ ஷீப்.

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.

பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணர்ச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில், நடிகை அபிராமி நடிக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவும் அவரது நடிப்பை கண்டு கண்கலங்கியுள்ளது.

இதுபற்றிப் பேசிய இயக்குநர் ராஜ்மோகன், “பாபா பிளாக்‌ ஷீப்” பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா.

இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது.

இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார்.

படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

மிகவும் உணர்ச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது.

நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் டீசரோடு சந்திக்கிறேன்” என்றார்.

You might also like