ரூ.4,445 கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்காக்கள்!

– பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமரின் ‘ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ரூ.4,445 கோடி மதிப்பில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை பிரதமா் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ் அமைக்கப்படவிருக்கும் மெகா ஜவுளிப் பூங்காக்கள், ஜவுளித் துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்குவதுடன் கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈா்க்கும்.

லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘உலகுக்காக உருவாக்குவோம்’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இவை திகழும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். தொழிற்பூங்காவிற்கு 1052 ஏக்கர் நிலம் உள்ளது. அதோடு எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம்.

பண்ணையில் இருந்து நூல் இழை, அது தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆடை வடிமைப்பு, தயாரிக்கப்பட்ட ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்ற செயல்பாட்டின் அடிப்படையில் ஜவுளித்துறையை இந்தப் பூங்காக்கள் வலுப்படுத்தும்.

இந்த ஜவுளிப் பூங்காக்கள், ஜவுளித் துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக் கான முதலீடுகளை ஈர்த்துலட்சக்கணக்கான வேலைவாய்ப்பு களை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஊக்கத் தொகையுடன் இணைந்த உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையை மேம்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையில் இந்தத் திட்டத்தில் பங்கேற்க 67 விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வந்தன.

அதில், 64 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதில் 56 விண்ணப்பங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ள நிலையில் புதிய நிறுவனம் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜவுளித் துறை வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியாக 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.4,445 கோடி செலவிடப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ள மெகா ஜவுளிப் பூங்காவிற்கு விருதுநகர் மாவட்டத்தைத் தேர்வு செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

You might also like