பாமரன் பற்றி ஜெயகாந்தன் :
“என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்கரவர்த்திகளையே சந்தித்து விட்டு வந்தவன். யார் அந்த சக்கரவர்த்திகள்?
கிராமப்புறங்களில், வயலோரங்களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.”
– நன்றி கவிஞர் இந்திரன் முகநூல் பதிவு