– மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தகவல்
கடந்தாண்டு வானிலை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.
அதில், ”2022-2023 காலகட்டத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரில் சிக்கி நாடு முழுவதும் 1,997 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,615 கால்நடைகள் உயிரிழந்துள்ளன” என்றுத் தெரிவித்துள்ளார்.
மேலும், 18.54 லட்சம் ஹெக்டார் நிலப்பரப்பிலான பயிர்களும் மழை, வெள்ளம் போன்றவற்றால் சேதமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.