ஊட்டச்சத்து மாத்திரையால் உயிரிழந்த மாணவி!

உதகை அருகே பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அங்கு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கடந்த 6ம் தேதி குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி போட்டு மாத்திரை உட்கொண்டனர்.

இந்த போட்டியில் அதிக மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கோவையில் இருந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அப்போது சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதகையில் உள்ள உருது பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் முகமது அமீன், ஆசிரியர் கலைவாணி ஆகிய 2 பேரையும் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

You might also like