நான் ஆபீஸ் பாயாக இருந்தேன்!

 – நெகிழ்ந்த மாரி செல்வராஜ்

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய நாயகி காயத்ரி, “மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அதை நான் நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் பயணம் எனக்கு மிகவும் முக்கியம். அனைவரும் இப்படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
ஒரு நல்ல படைப்பை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் ஜெயிக்கும்’ என்றார்.

இயக்குநர் விருமாண்டி, “ஒரு படத்திற்குத் தலைப்புதான் முக்கியம். அதைப் பார்த்துத். தான் தியேட்டருக்கு வருவார்கள். இந்த தலைப்பை கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப் படத்தின் கதைக்களம் பெட்டி கேஸ்களைப் பற்றிப் பேசுவதாகத் தெரிகிறது, படம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என வாழ்த்தினார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “நடிகர் பிரசன்னா மற்றும் நிஷாந்த் அவர்களுக்கு நன்றி, நாங்கள் ராம் சாரிடம் பணிபுரியும்போது தனபால் அண்ணனை டூட் என்றுதான் கூப்பிடுவேன், எனது தோழர் அவர், இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்.

படத்தின் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசும்போது, “நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக்கொடுத்ததுதான் எல்லாம். அவருக்கு நன்றி.

இந்தப் படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம். சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், “தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆபீஸ் பாயாக இருந்தேன்.

எனக்கு முன்னாலே அவர் இயக்குநராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்துகொண்டவர்.

இவர்களிடம் இருந்துதான் சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்டகால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்டது விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிபெறுவார். மேலும் இந்தப் படக்குழுவிற்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

You might also like