‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் சூப்பர் ஹீரோயினைப் பார்க்கலாம்!

நடிகை பிரியங்கா திரிவேதி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் வங்காளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.

பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர். அவர் நடிக்கும் 50வது படம் டிடெக்டிவ் தீக்‌ஷனா.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ படத்தை த்ரிவிக்ரம் ரகு இயக்குகிறார்.

படம் குறித்துப் பேசிய பிரியங்கா உபேந்திரா, “நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். நான் 16 வயதில் மிஸ் கல்கத்தா ஆனேன், பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.

என் முதல் திரைப்படம் பெங்காலி திரைப்படம், தேசிய விருது பெற்ற இயக்குநரான பாசு சாட்டர்ஜி இயக்கிய ஹதத் பிரிஷ்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்தது.

எனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிறகு எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன.

அந்த நேரத்தில், நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை.

நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர், மெதுவாக மீண்டும் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை.

பெண்களை முதன்மைபடுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது. எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ என் 50வது படம். ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ரசிகர்களிடமிருந்து பெரும் அன்பு கிடைக்கும்பொழுது அவர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதிலும்,பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள், இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை டிடெக்டிவ் தீக்‌ஷனாவில் பார்க்கலாம்.

பெண்கள் சக்திவாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்கமுடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்கமுடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

You might also like