அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மார்டின் டீசர்!

ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிப்ரவரி 23 ஆம் தேதியன்று பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாபாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது.

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாகவ பரவிவரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

You might also like