அன்றைக்கு இருந்த தணிக்கை முறை!

பரண்:

கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படம் தணிக்கைக்குழு ஆய்வுக்கு வந்தபோது சென்னை பாரகன் தியேட்டரில் மூன்று நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது.

நாத்திகக் கருத்துக்கள் இருப்பதாகக் கூறப்பட்டு, அவை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

அப்போது தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ‘சண்டே அப்சர்வர்’ பாலசுப்பிரமணியன்.
#
மேகலா பிக்சர்ஸின் ‘திரும்பிப் பார்’ படம் தணிக்கை செய்யப்பட்டபோது 3000 அடி வெட்டப்பட்டது.
#
அதே படத்தில் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோவில் மேல் ஏறியதைக் குறிப்பிடும் வகையில் ”கோபுரம் ஏறியிருக்கும் தலைவர்களே” என்ற வசனம் தணிக்கைக் குழுவில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது.
#
காஞ்சித் தலைவன் – படத்தில் எம்.ஜி.ஆருக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடிய ‘வெல்க காஞ்சி’ என்ற பாடல் அண்ணாவைக் குறிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு அதே வரி ‘வெல்க நாடு’ என்று மாற்றப்பட்டது.

– முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

You might also like