கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி 2-வது நாள் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 118 ரன்களுடனும், ஜடேஜா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதன்பிறகு இன்றைய நாளின் 3-வது பகுதியில் வீசப்பட்ட முதல் ஓவரில் ரோஹித் சர்மா போல்ட் ஆனார்.

இதன்மூலம் டெஸ்ட் கேப்டனாகத் தனது முதல் சதத்தை பதிவு செய்த ரோகித் சர்மா, புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாகச் சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற பெயரை ரோஹித் சர்மா எடுத்துள்ளார்.

You might also like