நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இந்திய ரயில்வே 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் ரூ.41,000 கோடி அதிகம். அப்போது இந்திய ரயில்வேயின் வருவாய் ரூ.1,48,970 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் ரயில்வே இதுவரை 1,185 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,35,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
படுத்து உறங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்களை 2025-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளதையும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.