– இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு
தனுஷ் நடித்த வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, சென்னையில் சில செய்தியாளர்களைச் சந்தித்து மனந்திறந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்த வாத்தி கதை 1997-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் நடைபெறுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் துவங்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் தளர்வுகள் அதிகம் வழங்கப்படாததால் பெரும்பாலும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப் படத்திற்காக 1990-களின் காலகட்டத்தை உணர்த்தும்விதமாக செட் அமைத்து படமாக்கி இருக்கிறோம்.
படத்தின் கதைக் கரு, களம் என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்களில் கொஞ்சம் மாறுதல்களை செஞ்சிருக்கோம்.
அந்த வகையில் தெலுங்கு படத்தைவிட தமிழ் படத்தின் நீளம் இரண்டு நிமிடங்கள் கூடுதலாகவே இருக்கும்.
1990-களில் கல்வி முறையில் நடைபெற்ற சில விஷயங்களை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும், இப்போதுவரை அந்த விஷயங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்வேன்” என்றார்.