தோனி நிறுவனம் தமிழில் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’!

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று சென்னையில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அப்போது பேசிய திருமதி சாக்ஷிசிங் தோனி,

“நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா, “நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம்.

அந்த எண்ணத்துடன்தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது.

மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம் இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

தமிழ்த் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்” என்றார்.

You might also like