தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களமி இறங்குகிறார்.
அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும் படத்திற்கு வித்தியாசமாக ‘வாட் தி ஃபிஷ்’ ‘WHAT THE FISH’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
உலகத்தரத்தில் அமைந்துள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தெரியாத பல அமானுஷ்யங்களை மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
மனோஜின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு புதிய உலகைக் காட்டப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது.
உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் படத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.
அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. “வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக, மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் உருவாகிறது.